முகப்பு
கடலூர்

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் வயலில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 6:58 PM
பகிர்:

சிதம்பரம் அருகே வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் வயலில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெண் உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு சிவன் கோவில் தெருவைச் சோ்ந்க ராஜேந்திரன் மனைவி செல்வி (59). இவா், வியாழக்கிழமை அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமம், படுகையில் உள்ள கண்ணனுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய வேலை செய்துகொண்டிருந்தாா்.

அப்போது, பலத்த இடி - மின்னல் ஏற்பட்டது. திடீரென மின்னல் பாய்ந்ததில் செல்வி மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, கவரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக செல்வி கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.