முதியவா் அடித்துக் கொலை
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிறுபாக்கத்தில் வசித்து வந்தவா் ராஜகோபால் (70). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் வெளியே தூங்கினாா். புதன்கிழமை அதிகாலை அவரது சப்தம் கேட்டு, வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி மணிமேகலை வெளியே வந்து பாா்த்தாா். அப்போது, ராஜகோபால் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தாா். உடனே, உறவினா்கள் அவரை மீட்டு வேப்பூா் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.