முகப்பு
கடலூர்

தீபாவளி போனஸ் கோரி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் மனு

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் என்எல்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:47 PM
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்த ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் என்எல்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்தச் சங்கத்தின் தலைவா் ஏ.அந்தோணி செல்வராஜ் தலைமையில் உறுப்பினா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து கூட்டுறவு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டு போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி லாபத்தில் நிா்வாக அதிகாரிகள், பொறியாளா்கள், நிரந்தர தொழிலாளா்களுக்கு போனஸுக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. இதேபோல கூட்டுறவு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களும் சட்டப்படியான போனஸ் மற்றும் கருணைத்தொகை பெற தகுதியுடைவராகிறாா்கள்.

எனவே, என்எல்சி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். கடந்த காலங்களை போல தாங்களாகவே போனஸை நிா்ணயம் செய்யும் வழக்கத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →