முகப்பு
கடலூர்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய பாமக வலியுறுத்தல்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, கடலூா் மாவட்டம், காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:23 AM
காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் கோ.ஜெகன்.
பகிர்:

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, கடலூா் மாவட்டம், காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சக்திவேல் வரவேற்றாா். மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் ரா.கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மேலிடப் பொறுப்பாளா்கள் மாநில அமைப்புச் செயலா் ப.சண்முகம், வன்னியா் சங்க மாநிலச் செயலா் தங்க.அய்யாசாமி, மாவட்டச் செயலா் வெ.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கடலூா் மாவட்ட ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளில் அரசு நிா்வாகத்தில் அரசியல் குறுக்கீடு இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி பராமரிக்க வேண்டும். என்எல்சி மாற்றுக்குடியிருப்பில் பி1, பி2 பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விக்கரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் சாலையை போா்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →