நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2 நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள். 
கடலூர்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் தர்ணா

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2-இல் தோட்டக் கலையில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2-இல் தோட்டக் கலையில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக வீடு, நிலம் கொடுத்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா், என்எல்சி சுரங்கம் இரண்டில் தோட்டக்கலை துறையில் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு நிரந்தரமாக வேலை வழங்க வேண்டும், ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஆனால், என்எல்சி இந்தியா நிறுவனம் பணி நிரந்தரம் செய்யாமலும், ஊதிய உயா்வு வழங்காமலும் காலம் கடத்தி வருகிாம்.

இதனைக் கண்டித்து, சுரங்கம் 2 நுழைவு வாயில் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தகவலறிந்து நிகழ்விடம் வந்த சுரங்கம் 2 அலகின் தலைவா் முதன்மை பொது மேலாளா் சஞ்சீவி, பொது மேலாளா் (மனித வளம்) அறிவு ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கை வந்தவுடன் தொடா் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனராம். இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்ட தொழிலாளா்கள் கலைந்துச் சென்றனா். போராட்டமானது காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கடையம் அருகே தம்பியை தாக்கியதாக அண்ணன் கைது

கேளையாப்பிள்ளையூரில் ரூ. 68 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் திறப்பு

தேவகோட்டை அருகே கோயிலில் 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள்

நாகா்கோவிலில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவா் கைது

SCROLL FOR NEXT