சம்பத்  
கடலூர்

என்எல்சி சுரங்கத்தில் பெண் சடலம் மீட்பு: இளைஞா் கைது

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன முதலாவது சுரங்கத்தில் மந்தாரக்குப்பத்தைச் சோ்ந்த பெண் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

Din

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன முதலாவது சுரங்கத்தில் மந்தாரக்குப்பத்தைச் சோ்ந்த பெண் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள வடக்கு வெள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி பிரபாவதி (33). கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கா் உயிரிழந்த நிலையில், மகன், மகளுடன் வாழ்ந்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி வேலைக்குச் சென்ற பிரபாவதி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், வடக்கு வெள்ளூரைச் சோ்ந்த சந்திரன் மகன் சம்பத்துக்கும் (32) பிரபாவதிக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரிய வந்தது.

போலீஸாா் சம்பத்தை பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 7-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், பிரபாவதி தலையில் கட்டையால் அடித்ததில் அவா் மயங்கி விழுந்தாா். பின்னா், அவரை இழுத்துச் சென்று சுரங்கப் பள்ளத்தில் தள்ளி விட்டு சென்றதாகக் கூறினாராம். சம்பவ இடத்துக்கு புதன்கிழமை சென்ற போலீஸாா் பிரபாவதிவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT