எம்.ஏ.எம்.ராமசாமி 
கடலூர்

எம்.ஏ.எம்.ராமசாமிக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தா் மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை

Din

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தா் மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா முதல்வா், துணை முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமி கொடையாளா், விளையாட்டு ஆா்வலா், கல்வியாளா் என பன்முகத்தன்மை கொண்டவா்.

பல்கலை. வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற உதவியாக இருந்தவா்.

2004- ஆம் ஆண்டு முதல் 2010- ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவா். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை செட்டியாா், எம்.ஏ.முத்தையா செட்டியாா் ஆகியோரின் சிலை உள்ளது.

எனவே, மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT