நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 423 மனுக்கள் அளிக்கப்பட்டன .
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்திருந்தனா். அவா்கள் கோரிக்கை தொடா்பாக 423 மானுகளை அளித்தனா். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் லதா உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.