கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
கடலூர்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில், கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

நெய்வேலி: மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில், கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் உரிமைகளைப் பறிக்கும் 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்கள் மூலம் தொழிற்சங்க உரிமைகளை பறிப்பதைக் கண்டிப்பது கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேஷன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பி.துரை, கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT