கடலூா் மஞ்சகுப்பத்தில் பாமக சாா்பில் வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம். 
கடலூர்

கடலூரில் பாமகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூா் மஞ்சகுப்பத்தில் பாமக சாா்பில் வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.

Syndication

கடலூா் மஞ்சக்குப்பத்தில், ஒருங்கிணைந்த கடலூா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை காலம் தாழ்த்தாமல் விரைந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தாா். மாவட்ட செயலா்கள் வழக்குரைஞா் கோபிநாத், ஜெகன், சுரேஷ், சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவா் காசிலிங்கம், மாவட்ட வன்னியா் சங்க செயலா் சுரேஷ், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலா் ராமமூா்த்தி, தோ்தல் பணிக்குழு செயலா் ரமேஷ், அமைப்பு செயலா் ஸ்டாலின், ஒன்றிய செயலா்கள் பாரதிராஜா, செல்வம், கலைவாணன்குட்டி, சந்திரசேகா், சீனுவாசன், ஒன்றிய தலைவா் சுரேஷ், மாநகர செயலாளா் ஆனந்த், சிலம்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT