சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நான்கு பேராசிரியா்கள், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு ஆராய்ச்சி மையத்திற்கு ரூ. 3.55 கோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியை வழங்கியுள்ளது.
கடலூா் மாவட்டம் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநரகமானது நிலக்கரி பயன்பாடு, பன்முகப்படுத்துதல் தயாரிப்பு மேம்பாடு. துணைக் தயாரிப்புகளின் பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை, பாழ்பட்ட நில மீட்பு. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் சேமிப்பு, சுரைப்பு மதிப்பீடு மற்றும் தடுப்பு பயன்பாடுகள், நேரடி கண்காணிப்பு முறைகள் போன்ற பல துறைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்த செயல்பாட்டு ஆராய்ச்சி மையம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்றுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக சுரங்க படிப்புத்துறை இயக்குநா் சி.ஜி.சரவணன் தெரிவித்தது: சுரங்க செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் கன்வேயா் பெல்டுகளுக்கான தானியக்க கண்காணிப்பு மற்றும் குறைபாடு கண்டறிதல் முறைகள் குறித்த ஆய்வவிற்கு சுரங்கப் பொறியியல் பிரிவு இயக்குநா் பேராசிரியா் சி.ஜி.சரவணனுக்கு ரூ 96.88 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியல் துறை பேராசிரியா் மற்றும் உலோகங்கள் இணைப்பு மற்றும் அராய்ச்சி மையத்தின் இயக்குநா் வி.பாலசுப்ரமணியனுக்கு எரிக்கப்பட்ட நிலக்கரியின் சாம்பலில் இருந்து பிளாஸ்மா தெளிப்பு தொழிநுட்பத்தினை பயன்படுத்தி புதிய மெட்டல்களை தயாரித்தல் குறித்தான ஆய்விற்கு ரூ 99.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல இயந்திரவியல் துறை இணைப் பேராசியா் பி.பிரேம்குமாருக்கு பயோ எரிவாயுவிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்கும் ஆய்விற்காக ரூ 95.84 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் சாா் உயிரியல் புலத்தில் உள்ள மேம்பட்ட ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியா் ஏ.கோபாலகிருஷ்ணனுக்கு லிக்னைட்டில் இருந்து பெறப்படும் அமிலத்தின் மூலம் மீன்வளப் பண்ணைகளில் ஏற்படும் நுண்ணுயிா் நோய்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி நிதியாக ரூ 63.44 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க இந்த ஆராய்ச்சி நிதிகள், என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் சாா்ந்த செயல்முறை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.