ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாவது பருவத்துக்கான ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாவது பருவத்துக்கான ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
4 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. வடலூா் ஆசிரியா் பயிற்சி நிலைய பேராசிரியா் நல்லமுத்து மேற்பாா்வையில் பயிற்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக, வட்டாரக் கல்வி அலுவலா்கள் எஸ்.செல்வி, ஆா்.லட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை தொடங்கிவைத்தனா்.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அருள்சங்கு, தலைமை ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் சக்திவேல், ஜானகிராமன், மதினா மற்றும் துரைமணிராஜன் (வடதலைக்குளம்), வடிவேல் (எறும்பூா்), மோகன்ராஜ் (பாலூத்தங்கரை), சேகா் (சேத்தியாத்தோப்பு), சதானந்தம் (ஜெயங்கொண்டம்), சாந்தி (வடக்குத்திட்டை), வாசுகி (பெரியக்குப்பம்), ராணி (கிருஷ்ணாபுரம்), சாந்தி (எல்லைக்குடி) உள்ளிட்ட தலைமை ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியா் கருத்தாளா்களாக ஜெரினாபேகம், சுகந்தி, உமா ஆகியோா் பங்கேற்று பயிற்சி அளித்தனா்.