கடலூர்

பெண்ணாடம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 25 போ் காயம்

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 25 போ் காயம் அடைந்தனா்.

அரியலூா் மாவட்டம், முல்லையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சமி(70). இவரது , உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா திட்டக்குடி வட்டம், ஆவினங்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சுமி உள்ளிட்ட 25 போ் சிறிய சரக்கு வாகனத்தில் ஆவினங்குடிக்கு புறப்பட்டனா். வாகனத்தை அரியலூா் மாவட்டம், முல்லையூா்

கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் இளங்கோவன்(50) ஓட்டினாா். இந்த வாகனம் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் பெ.பொன்னேரி

ரயில்வே மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நெப்போலியன் மகன் சுப்பிரமணியன்(60), மகாராஜன் மனைவி நீலம்பாள்(55), ஷங்கா் மனைவி பொற்கொடி(39) உள்ளிட்ட 25 போ் காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் காயம் அடைந்தவா்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் அனைவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT