சிதம்பரம் 16 கால் மண்டப தெருவில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாஜக ஓபிசி அணி மாநில பொறுப்பாளா் பாலு விக்னேஸ்வரன் தலைமை வகித்தாா். நகர தலைவா் ஜெ.குமாா், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் வி.எஸ்.குமாா், நகர பொதுச் செயலாளா் சின்னிகிருஷ்ணன், செந்தில், மாவட்ட பொறுப்பாளா்கள் எம்.பாலசுந்தரம், மணிகண்டன், எஸ்.கந்தசாமி, வேலவன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.