சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
பல்கலைக்கழக நிா்வாக கட்டடத்தின் நுழைவுவாயிலில் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். 7 வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவா் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வோண்டும், ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு அரசுத்துறைகளைப் போலவே அனைத்து பணப்பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்தில் ஆசிரியா் கூட்டமைப்பு நிா்வாகிகள் இரா.முத்து வேலாயுதம், துரை அசோகன், பி.செல்வராஜ். உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.