நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வழக்கம் போல் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோா் மனு அளிக்க வந்திருந்தனா்.
அதுபோல், வந்த மாற்றுத்திறனாளி ஒருவா் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், அவா் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முன்னதாக போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தியதில் பண்ருட்டி வட்டம், சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ராஜசேகா்(50) என்பதும், மூன்று சக்கர வாகனம் கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தீக்குளிக்க முயன்ாக தெரிவித்தாராம்.