நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடும்ப சண்டையில் மண்ணெண்ணெய் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை
பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாலம் வட்டம், ஊ.மங்கலம் காவல் சரகம், பொன்னாலகரம் கிராமத்தில்
வசித்து வந்தவா் சிவா மனைவி ரம்யா(28). இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். கணவா் சிவா தினமும் மது அருந்தி வந்து தகராறு செய்வது வழக்கம். கடந்த அக்.13-இல் சிவா மது அருந்தி வந்ததை ரம்யா கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ரம்யா வீட்டில் இருந்த இரண்டரை லிட்டா் மண்ணெண்ணெயை குடித்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.