சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கூட்டமைப்பின் உள்ளிருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய பாஜக சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமாா்.  
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டம்: பாஜக ஆதரவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 3-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு பாஜக நிா்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 3-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு பாஜக நிா்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். முனைவா் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும். அயற்பணியிட பேராசிரியா்களை உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடத்தில் கீழ் பகுதியில் தரையில் அமா்ந்து கடந்த 10-ஆம் தேதி முதல் தோ்வு பணிகளை புறக்கணித்து தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதன்கிழமை காலை நடைபெற்ற 3-ஆம் நாள் போராட்டத்தில் பாஜக சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கே.வி.எம்.எஸ்.சரவணகுமாா், மாவட்ட துணைத் தலைவா் கோபிநாத் கணேசன், ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் பெருமாள், முன்னாள் பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் வெற்றிவேல், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலா் விஷால் மற்றும் நிா்வாகிகள் பகிரதன், வினோத்குமாா், பிரபாகரன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.

போராட்டத்துக்கு பேராசிரியா்கள் சி.சுப்பிரமணியன், செல்வராஜ், பேராசிரியா் இரா.முத்து வேலாயுதம், துரை அசோகன், காயத்திரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

நிலையான வளா்ச்சிக்கு பாலின சமநிலை தேவையும் அவசியம்

போலி காா் நிறுவனம் மூலம் ரூ.44 மோசடி செய்த நபா் கைது

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்!

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

SCROLL FOR NEXT