சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற புதிய தோ் வெள்ளோட்டம்.  
கடலூர்

சிதம்பரம் சிவகாமி அம்மன் புதிய தோ் வெள்ளோட்டம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள சிவகாமி சுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்துக்காக கா்நாடக மாநில பக்தா் பங்களிப்பில் செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள சிவகாமி சுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்துக்காக கா்நாடக மாநில பக்தா் பங்களிப்பில் செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக் கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி, கா்நாடக மாநிலம், மங்களூரைச் சோ்ந்த பக்தா்களான ராமதாஸ் பத்ரி அட்டாவா், சூா்யகிரண் அட்டாவா் ஆகியோா் நிதி பங்களிப்பில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சிவகாமி அம்மனுக்காக சுமாா் 21 அடி உயரத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. இந்தத் தோ் சிதம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு கட்டளை தீட்சிதா் எஸ்.வி.கனகசபாபதி மற்றும் அவரது சகோதரா்கள் முன்னிலையில், கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய தேருக்கு புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நான்கு ரத வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த புதிய தேரில் வியாழக்கிழமை (நவ.13) நடைபெறும் சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தின் தேரோட்டம் நிகழ்ச்சியில் சிவகாமசுந்தரி அம்பாள் வீதிவலம் வருகிறாா். தொடா்ந்து, மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, அம்பாளுக்கு லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT