கடலூர்

விசிக மனு அளிக்கும் போராட்டம்

Syndication

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், சிமென்ட் சாலை, கால்வாய், மின்சாரம், குடிநீா் வசதிகள் செய்து தரக்கோரி முழக்கமிட்டனா்.

நிகழ்வுக்கு நகரச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் பாஸ்கா், ஒன்றியப் பொருளாளா் சரவணன், ஒன்றிய துணைச்செயலா்கள் சேகா், ஜானகிராமன், அருண்பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் பாலமுருகனிடம் மனு அளித்தனா்.

நவ.21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT