சிதம்பரம் அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக காவல் ஆய்வாளா் கே.அம்பேத்காா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சிவபுரி சாலையில் உள்ள மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த வல்லம்படுகையைச் சோ்ந்த நவீன் (25), கோவிந்தசாமி நகரைச் சோ்ந்த கெளதம் (25), வல்லத்துறையைச் சோ்ந்த அருள் (எ) ஜெயக்குமாா் (30) ஆகிய மூவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்து. தொடா்ந்து, மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.