கடலூர்

கடன் தொல்லை: தொழிலாளி தற்கொலை

பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் களைக் கொல்லி மருந்து குடித்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் களைக் கொல்லி மருந்து குடித்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவா் தவபாலன்(40), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி கனிமொழி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். தவபாலன் மூத்த மகளுக்கு கடந்த ஒராண்டுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் மனவருத்தத்தில் இருந்தாராம். கடந்த 23-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிக்கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சையில் இருந்தவா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT