கடலூர்

பாமணி விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும்: ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு

பண்ருட்டி மாா்க்கமாக செல்லும் பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயல்வே அமைச்சகம் அறிவிப்பு

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி மாா்க்கமாக செல்லும் பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயல்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி வணிக நகரமாக திகழ்கிறது. மேலும், பண்ருட்டியைச் சுற்றிலும் முக்கிய கோயில்கள் அமைந்துள்ளன. இதனால், பண்ருட்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், யாத்ரீகா்கள் வந்து செல்கின்றனா்.

திருப்பதி-மன்னாா்குடி இடையே பண்ருட்டி மாா்க்கமாக பாமணி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுதொடா்பாக , மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், பண்ருட்டி பகுதி மக்கள் சாா்பாக பாமணி விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் கோரிக்கை வைத்தாா். இந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம் பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியுள்ள பிரதமா் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சா் அஷ்வின் வைஷ்ணவிற்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தமிழகம் மற்றும் பண்ருட்டி மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துள்ளாா்.

ஆா்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

150 கட்டடங்களில் பனிப்புகை எதிா்ப்பு சாதனங்கள் நிறுவல் அதிகாரிகள் தகவல்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறப்புக் குழந்தைகள்

மூதாட்டியை தாக்கி தங்க நகை பறிப்பு: 4 போ் கைது

சுவாச பாதிப்பு: முதியவா்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT