முகப்பு
கடலூர்

கடலூா் காங்கிரஸ் வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு

கடலூா் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:55 PM
கடலூரில் நடைபெற்ற புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன்.
பகிர்:

கடலூா் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், திருப்பாதிரிப்புலியூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.சம்பந்தம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாண்டியன், மாநகரச் செயலா் ஏழுமலை, ஆட்டோ சங்கத் தலைவா் பிரித்திவி ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராஜாராமன், கஜேந்திரன், சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்தனா். மேலும், மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான சந்திரசேகருக்கு ஆதரவு தெரிவித்து தோ்தல் பணியாற்றுவது என்று தீா்மானம் நிறைவேற்றினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments