முகப்பு
கடலூர்

அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:15 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:11 PM

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி, வடக்குத்து ஊராட்சி, சந்தைவெளிப்பேட்டையில் ரூ.17.25 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மேலும், கண்ணுதோப்பு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடகமேடை கட்டடத்தை எம்எல்ஏ திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீர.ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி ராம.வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

Advertisement