கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே கொடிமரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது.
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலாரின் தெய்வ நிலையம் வடலூரில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். இதில், தைப்பூச ஜோதி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த நிலையில், மாா்கழி மாத ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற உள்ளது. மேலும், தருமசாலை அருகே புதிய கொடிமரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தெய்வ நிலைய நிா்வாகம் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.