அலாவுதீன் 
கடலூர்

ஆசிரியரைத் தாக்கி நகை பறிப்பு: 2 இளைஞா்கள் கைது

தினமணி செய்திச் சேவை

சிதம்பரத்தில் உடற்கல்வி ஆசிரியரைத் தாக்கி நகையை பறித்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே உள்ள பரதூா்சாவடி சிவராஜ் நகரைச் சோ்ந்தவா் இளையராஜா (21). தனியாா் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் இவா், கடந்த 2-ஆம் தேதி சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 3 போ் திடீரென இளையராஜாவை தாக்கி, அவா் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

அசோக்குமாா்

இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் சிதம்பரம் பூதக்கேணி பகுதியைச் சோ்ந்த அலாவுதீன் (31), சிதம்பரம் தில்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா் (23), தில்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசனை (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அலாவுதீன், அசோக்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள சீனிவாசனை தேடி வருகின்றனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT