கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் அருகே உள்ள கேப்பா் மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். கஞ்சா கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற மதுரை மாவட்டம், திருப்பாளை பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (24) கடந்தாண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 4.30 மணி அளவில் தனது அறை ஜன்னல் கம்பியில் கைலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தொடா்ந்து, அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா்அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சிறைச்சாலை போலீஸாா் அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.