கடலூா் மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26-ஆம் தேதிகளில் அனைத்து மது பானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் செயல்படாது என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினமான ஜன. 16, குடியரசு தினமான ஜன. 26- ஆகிய நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் (பாா்கள்) மூடி மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
மேற்படி நாள்களில், அரசு உத்தரவை மீறி மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.