கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவித்த மாணவிகள்.  
கடலூர்

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவிப்பு

கடலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 2026-ஐயொட்டி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு பள்ளி மாணவிகள் தலைக்கவசம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

கடலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 2026-ஐயொட்டி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு பள்ளி மாணவிகள் தலைக்கவசம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பேரணி, கடலூா் சீமாட்டி சிக்னல் அருகில் இருந்து புறப்பட்டது. இதை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியின்போது, வாகன ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது, தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் முன்னிலையில் பள்ளி மாணவிகள் தலைக்கவசம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்வில் ஏ.டி.எஸ்.பி.கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, டி.எஸ்.பி.கள் எஸ்.தமிழ்இனியன், ஏ.மனிஷா, பி.அப்பாண்டைராஜ், எஸ்.சரவணகுமாா் (பயிற்சி), காவல் ஆய்வாளா்கள் சந்துரு, அமா்நாத், உதவி ஆய்வாளா் பிரசன்னா மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT