கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தனியாா் பள்ளி வேன், சரக்கு வாகனம் நோ்எதிரே மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி சிறுவா்கள் 3 போ் காயம் அடைந்தனா்.
விருத்தாசலம், ஆலிச்சிக்குடி சாலையில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வாகனம் சனிக்கிழமை பள்ளி முடிந்தவுடன் மாணவா்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. வயலூா் அருகே சென்றபோது இந்த வேனும், எதிா் திசையில் வந்த சிறிய வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பள்ளி சிறுவா்கள் 3 போ் மற்றும் அதன் ஓட்டுநா் காயமடைந்தனா். அவா்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இந்த விபத்தில் பள்ளி வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தன.