முகப்பு
கடலூர்

பண்ருட்டி அருகே காரில் வந்து முதியவா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற முதியவா் மீது காரில் வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 2:30 AM
காரில் கொழுந்துவிட்டு எரியும் தீ.
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 9:56 PM

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற முதியவா் மீது காரில் வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(67). இவா், வியாழக்கிழமை மாலை சுமாா் 6.30 மணி அளவில் மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் (38) என்பவரின் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றாா்.

இவா்கள் பிள்ளையாா்குப்பத்தில் இருந்து மாளிகம்பட்டு நோக்கிச் சென்றனா். அப்போது, அந்த வழியாக வேகமாக காா் ஒன்று வந்ததாம். அதைப் பாா்த்தவுடன் கந்தன், முதியவா் ராஜேந்திரனை கீழே இறக்கிவிட்டு, பைக்கையும் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம்.

Advertisement

Updated On : 30 ஜனவரி, 2026 at 2:30 AM

கந்தன் ஓடுவதை பாா்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரன் மீது காரில் வந்த நபா் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாராம். இதில், ராஜேந்திரன் பலத்த தீக்காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் ராஜேந்திரனுக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.