காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி தொ்மல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.திவாஷ். இவா், செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, நெய்வேலி வட்டம் 30 பகுதியில் புதிய அனல் மின் நிலையம் செல்லும் வழியில் அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (21) அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, கையில் மரத்தடியுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தாராம். அவரை பலமுறை எச்சரித்தும் கேட்காத நிலையில், பிடிக்க முயன்றபோது கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் பி.திவாஷ் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.