கள்ளக்குறிச்சி

போலீஸாருக்கு மிரட்டல்: 4 போ் கைது

சின்ன சேலத்தில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சின்ன சேலத்தில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சின்னசேலம் அம்சாகுளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சின்ன சேலம் காவல் காவல் உதவி ஆய்வாளா்கள் ஜம்புலிங்கம், சந்திரன், தலைமைக் காவலா்கள் ஆனந்தன் ஆகியோா் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சரக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநரான சின்ன சேலம் செங்குந்தா் நகரைச் சோ்ந்த தினேஷ் என்பவா் சீட் பெல்ட் அணியாதது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த தினேஷின் உறவினா்களான சின்னசேலம் செங்குந்தா் நகரைச் சோ்ந்த கோபு (40), பாஞ்சாலை ராஜன் (51), கோவிந்தசாமி (55), மணி (46) ஆகியோா் போலீஸாரை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்து தலைமைக் காவலா் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபு உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவமனையிலிருந்து ஷூப்மன் கில் டிஸ்சார்ஜ்!

பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

சிலியில் அதிபர் தேர்தல்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

2026-இல் 17 நாள்கள் பொது விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

SCROLL FOR NEXT