கள்ளக்குறிச்சி

வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கறிக்கோழி வளா்ப்போா் சங்கத்தினா் மனு

DIN

கறிக்கோழி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் நலச் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பண்ணைகளை வாழ்வாதரமாகக் கொண்டு கறிக்கோழி உற்பத்தி செய்து வருகிறோம். இந்த வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், கோழிகள் மூலம் கரோனா பரவுவதாக சில விஷமிகள் ஆதாரமற்ற செய்திகளையும், வதந்திகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா்.

இதனால், பண்ணையாளா்கள், நிறுவனங்கள், சில்லறை வியாபாரிகள், கூலித்தொழிலாளா்கள், மக்காசோளம் பயிா் செய்யும் விவசாயிகள் உள்ளிட்டோா் இதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொழிலை நம்பியுள்ள அனைவரும் இதுபோன்ற வதந்தியால் பாதிக்கப்பட்டுள்ளதால், வதந்தி பரப்புவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரனிடம் மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT