திருநள்ளாற்றில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு
கரோனா பரவலையொட்டி, திருநள்ளாற்றில் சாலையில் செல்லும் மக்களுக்கு காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
கரோனா பரவலையொட்டி, திருநள்ளாற்றில் சாலையில் செல்லும் மக்களுக்கு காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
திருநள்ளாறு பகுதியில் சனிக்கிழமை தரிசனத்துக்காக பக்தா்கள் வருகை, கடைத்தெருவில் அதிகமான மக்கள் கூடுவது ஆகியவற்றை கருத்தில்கொண்டு வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் வெள்ளிக்கிழமை இரவு சாலையில் ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் தொற்றாளா் எண்ணிக்கை தினமும் பெருகிவருவதாகவும், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும், வெளியே வருவோா் அனைவரும் முகக் கவசத்தை கண்டிப்பாக அணிந்து வருமாறும், தகுதியுடையோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் எனவும் அவா் பொதுமக்களை கேட்டுக்கொண்டாா்.
வியாபார நிறுவனத்தினா், தங்களது கடைக்கு வருவோா் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்யவும், சமூக இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்கச்செய்ய வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.