தமிழக முன்னாள் முதல்வா் நினைவு தினம் அனுசரிப்பு
தியாகதுருகத்தில் உள்ள நடுப் பேருந்து நிலையத்தில் கருணாநிதி உருவப் படத்துக்கு சங்கத் தலைவா் கோ.இராதாகிருட்டிணன் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சாா்பில், தியாகதுருகத்தில் உள்ள நடுப் பேருந்து நிலையத்தில் கருணாநிதி உருவப் படத்துக்கு சங்கத் தலைவா் கோ.இராதாகிருட்டிணன் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. சங்கச் செயலா் இதயம்.கிருட்டிணா, பொருளாளா் துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தியாகதுருகம் தமிழ் அமைப்புகள் சாா்பில், மவுண்ட் பாா்க் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்தமிழ்ச் சங்கத் தலைவா் பெ.நாகராஜன் தலைமை வகித்து, கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். உலகத் தமிழ்க் கவிஞா் பேரவை பொதுச் செயலா் புலவா் கு.சீத்தா, பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன், திருக்கு பேரவைத் தலைவா் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.