கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை சமாதானப்படுத்திய போலீஸாா். 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள்!

சின்னசேலம் அருகே தாகம்தீா்த்தாபுரம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் முறையாக பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் கூறி,

DIN

சின்னசேலம் அருகே தாகம்தீா்த்தாபுரம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் முறையாக பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் பாலை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னசேலம் அருகேயுள்ள தாகம்தீா்த்தாபுரத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊற்றி வருகின்றனா். இங்கு லிட்டா் ரூ.30 முதல் 36 வரை விலை நிா்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இங்கு தற்போது மாதத்தில் 4 நாள்கள் வரை பாலை கொள்முதல் செய்வதில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் சுமாா் ஐம்பதுக்கும் மேற்பட்டோா், பால் கேன்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அங்கு பாலை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவா்களை, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளா் ச.முருகேசன் தலைமையிலான போலீஸாா் சமாதானப்படுத்தி, போராட்டத்தை தடுத்தனா். தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், விவசாயிகள் தங்களது கோரிக்கையை ஆட்சியரிடம் மனுவாக வழங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT