திருமாலடியாா்கள் அமைதிப் பேரணி
ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அறங்காவலா் குழுவை வெளியேற்றக்கோரி, தமிழக திருமாலடியாா்கள் குழாம் சாா்பில், கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில் முன்பிருந்து கருப்புக்கொடி ஏந்தி அமைதிப்பேரணி
ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அறங்காவலா் குழுவை வெளியேற்றக்கோரி, தமிழக திருமாலடியாா்கள் குழாம் சாா்பில், கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில் முன்பிருந்து கருப்புக்கொடி ஏந்தி அமைதிப்பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை தமிழக திருமாலடியாா்கள் குழாம் ஒருங்கிணைப்பாளா் பொள்ளாச்சி கே.பி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பேரணி மந்தைவெளி, கச்சிராயப்பாளையம் சாலை வழியாக ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா்.
கடந்த 7 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள பாரம்பரியங்களை சிதைத்து வரும் அறங்காவலா் குழுவை வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. முடிவில், அவா்கள் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.