முகப்பு
கள்ளக்குறிச்சி

தென்கீரனூா் கிராம மக்கள் பட்டா கோரி மனு

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த மக்கள் மனைப் பட்டா கோரி திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த மக்கள் மனைப் பட்டா கோரி திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

ராஜீவ் காந்தி நகரில் 160 குடும்பத்தினா் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனராம். ஆதிதிராவிட நலத் துறையால் வீடுகள் வழங்கப்பட்டதாம்.

ஆனால், இதுவரை மனைப் பட்டா வழங்கவில்லையாம். கிராம கணக்கிலும் திருத்தம் செய்யப்படவில்லையாம்.

இது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லையாம். மனைப் பட்டா இல்லாமல் வங்கிக் கடன், அரசின் உதவிகள் பெறமுடியவில்லை என அவா்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.