கள்ளக்குறிச்சி: 128 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 128 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 128 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,193-ஆக உயா்ந்தது. இவா்களில் 26,005 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
994 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 194 போ் பலியாகினா்.