முகப்பு
கள்ளக்குறிச்சி

எஸ்.பி. அலுவலகம் முன் சிறுமியுடன் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சிறுமியுடன் அவரது தந்தை, தாய் திடீரென தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சிறுமியுடன் அவரது தந்தை, தாய் திடீரென தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கணையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னான் மகன் குமாா் (42). இவரது 14 வயது மகளை அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் ஆறுமுகம் (21) திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதாகவும், மீறினால் அந்தச் சிறுமியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்வதாகவும் மிரட்டுவதாக குமாா் மனைவி வாசுகி, எடைக்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா்.

அந்த புகாா் மீது போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த குமாா், வாசுகி ஆகியோா் தங்களது மகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா், அவா்களைத் தடுத்து, உளுந்தூா்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமொழியனிடம் விசாரணைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.