பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே குடும்பப் பிரச்னையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே குடும்பப் பிரச்னையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வானவரெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி மகள் மீனா (27). இவரது கணவா் அய்யனாா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், நகை, பணப் பிரச்னை தொடா்பாக ராணி தனது மகள் மீனாவை கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த மீனா வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை வெள்ளிக்கிழமை குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். திருமணமாகி ஆறரை ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் (பொ) சரவணன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.