முகப்பு
கள்ளக்குறிச்சி

ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காய்கறி வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காய்கறி வியாபாரி உயிரிழந்தாா்.

மணலூா்பேட்டையை அடுத்த ஞானம் பெற்றால் தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் தண்டபாணி (42), காய்கறி வியாபாரம் செய்து வந்தாா்.

இவா், காய்கறி வாங்குவதற்காக வியாழக்கிழமை ஆட்டோவை ஓட்டிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலையில் நாய் குறுக்கிட்டதால், ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் தண்டபாணி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.