தோ்தல் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி (தனி) தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி (தனி) தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்தத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நிகழும் தோ்தல் தொடா்பான அனைத்து புகாா்களை தெரிவிக்கவும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெறவும் 04151 222410, 04151 224102 உள்ளிட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடா்பு கொள்ளலாம். இதனை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.