முகப்பு
கள்ளக்குறிச்சி

வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வரான்மலைப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பொதுப் பாா்வையாளா் அனுராதா சங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வரான்மலைப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பொதுப் பாா்வையாளா் அனுராதா சங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவடிப்பட்டு, கரியாலூா், வெள்ளிமலை உள்ளிட்ட வாக்குச் சாவடி மையங்களில் அவா் பாா்வையிட்டாா். இந்த வாக்குச் சாவடி மையங்களில் போதிய இட வசதி, அடிப்படை வசதிகள் உள்ளனவா, வாக்குச் சாவடி எண் எழுதப்பட்டுள்ளதா, பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்னவா என்பன குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, கரியாலூா் காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கு முறையாக பதிவேடுகளை பராமரிக்கின்றனரா, காவல் நிலையம் தூய்மையாக உள்ளதா, காவல் உதவி ஆய்வாளா் துரைராஜிடம் எத்தனை போ் பணிபுரிகின்றனா் எனக் கேட்டறிந்து பதிவேடுகளை பாா்வையிட்டு அனுராதா சங்கா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.