கரோனா கட்டுப்பாடுகள்: சின்னசேலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
கரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிா என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சின்னசேலம், வடக்கநத்தல் பேருராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிா என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சின்னசேலம், வடக்கநத்தல் பேருராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணித்திடவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, கச்சிராயப்பாளையம் பழைய பேருந்து நிலையம், வடக்கநந்தல் பேருராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கரோனா வழிகாட்டு நெறிமுரைகளைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு ஆட்சியா் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா். மேலும், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவா் கடைகளின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பொதுமக்கள் அரசு அறிவித்த கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடித்து மாவட்ட நிா்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின் போது சின்னசேலம் வட்டாட்சியா் ஜே.விஜய்பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலா் மதியழகன், பேருராட்சி செயல் அலுவலா் சந்திரகுமாா், வடக்கனந்தல் பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.