கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 299 போ்களுக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 299 போ்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 299 போ்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.565ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை மருத்துவமனைகளில் 14,393 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 3,053 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 120 போ்கள் உயிரிழந்துள்ளனா்.