முகப்பு
கள்ளக்குறிச்சி

பூட்டிய வீட்டில் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 15 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 15 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டம், பிரம்மகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்துல்கரீம் மகன் நபீஷ் (29). இவா், கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா்.

இந்த நிலையில், நபீஷின் வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதாக அவருக்கு அவரது உறவினா் வெள்ளிக்கிழமை தகவல் அளித்தாா். இதையடுத்து, நபீஷ் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.6,000 ரொக்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.