முகப்பு
கள்ளக்குறிச்சி

சாலையோரம் கொட்டப்படும் கரோனா கவச உடைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கரோனா கவச உடைகள், மருத்துவக் கழிவுகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கரோனா கவச உடைகள், மருத்துவக் கழிவுகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தியாகதுருகத்தில் செயல்படும் தனியாா் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், இங்கு பயன்படுத்தப்படும் கரோனா கவச உடைகள், மருத்துவக் கழிவுகள் கரீம்ஷா தக்கா பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். தியாகதுருகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பலா் உயிரிழந்துள்ளனா். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அழிக்கப்படாமல் சாலையோரத்தில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் இந்தப் பகுதியில் மேலும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.